இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வியாழன், டிசம்பர் 29, 2011

திருவாரூர் மாவட்ட பிப்ரவரி 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட பிப்வரி 14 ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் E&S மண்டபத்தில் காலை 10.55மணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் கடந்த 18-12-2011 அன்று நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் வருங்கால தாவா பணிகள் கூறித்து ஆலோசனை செய்யபட்டது. மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10.00 மணிக்கு நடத்துவது என்றும் இதற்கு மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வது என முடிவு செயப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கைச் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

வியாழன், டிசம்பர் 15, 2011

உரிமையை மீட்க துபாய் தவ்ஹீத் ஜமாஅத்நோட்டிஸ் 15.12.2011

இறுதி நபித்துவ பொதுக் கூட்டம் 11.12.2011

11.12.2011 அன்று மேலப்பாளயம் பஜார் திடலில்  இறுதி நபித்துவ பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் இறுதி நபித்துவம் காத்த கோவை விவாதம் என்ற தலைப்பிலும் மவ்லவி P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் இறுதி நபித்துவம் என்ற தலைப்பிலும் சிறப்புரையற்றினார்கள். இதில் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர் ....  

  

திங்கள், டிசம்பர் 12, 2011

மரக்கடை லட்சுமாங்குடி கிளையில கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்குடி கிளையில் கடந்த 1-5-11 முதல் 17-5-11 வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிரைவு நிகழ்ச்சியல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மரக்கடை லட்சுமாங்குடி கிளையில் இலவச டியுசன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்குடி கிளையில் கடந்த 11-7-2011 அன்று 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச டியுசன் வகுப்பு ஆரம்பிக்கபட்டது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 17/7/11 அன்று இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அல்தாஃப் ஹுசைன் அவர்கள் பதில் அளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மார்க்கம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர்

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 1-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 3-8-2011 அன்று ரமலான் மாத சிறப்பு,இரவு தொழுகை எத்தனை ரக்காத்,லைலதுல் கதிர் ஆகியவை குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 10 /8 /11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிஸா பேகம் ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் அனீஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய நவீன பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 8-8-2011 அன்று ரமளான் சிந்தனை என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மரக்கடை லெட்சுமாங்குடி ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 12-8-2011 அன்று ஏழை மாணருக்கு ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 13-8-2011 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி சஹர் நேரம் வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு அப்துல் ஹமீத் மஹ்ழரி அவர்கள் பதில் அளித்தார்கள்

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரூபாய் 2 ஆயரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 14 /8 /11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 18-8-2011 அன்று ஃபி்த்ரா மற்றும் லைலதுல் கத்ர் இரவு பற்றி நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 20-8-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் விரல் அசைப்பு நெஞ்சில் கை கட்டுதல் போன்ற விசயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அன்றய தினம் பேண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரூபாய் 20780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 20780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் வட்டியில்லா கடனுதவி திட்டம்!

அல்லாஹ்வின் பேரருளால் 2011 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட வட்டி இல்லா கடன் திட்டத்தில் இதுவரை 12 நபர்கள் ரூபாய் 34500 வரை பயன் அடைந்து உள்ளார்கள்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் எவ்வித அடமானமும் பெறாமல் ஒவ்வொரு நாளும் அவர்களாகவே வந்து பணம் செலுத்த வேண்டும் அல்லாஹ்வுக்கு அஞ்சி
உங்கள் கடனை நிறைவேற்றுங்கள் என்ற அல்லாஹ்வின் அச்சம் மட்டுமே விதைக்கப்பட்டது.
இன்றைய தேதி வரை பணம் செலுத்திகொண்டு வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
முதலீடு வெறும் ரூபாய் 500 ல் ஆரம்பித்து அல்லாஹ்வின் கருணையால் ரூபாய் 14500 ஆக உயர்ந்து இந்த சிறுதொகையை கொண்டு 12 நபர்களுக்கு 34500 பயனடைந்துள்ளனர். எல்லா புகழும இறைவனுக்கே

லட்சுமாங்குடி கிளையில் இரத்த தான முகாம் – 34 நபர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிளையில் கடந்த 2-10-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்த இம்முகாமில் 34 நபர்கள் இரத்த தானம் செய்தனர். 10 நபர்கள் நேரமின்மையால் திருப்பி அனுப்பப்பட்டனர்

லெட்சுமாங்குடி கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

அடிப்படை வசதிகள் இல்லாத கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை சரி செய்யக் கோரி மனு – மரக்கடை லட்சுமாங்கு கிளை , பத்திரிக்கை செய்தி!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த மருத்துவனை. 1952 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டபப்ட்டது.
தற்போது இந்த மருத்துவமனையில் அடிப்படைய வசதிகள் ஏதும் இல்லாமலும், சுகாதரமற்றும், கட்டிடம் மிகவும் பழுந்தடைந்தும் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதையரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்கு கிளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பிரச்சனையை புகைப்பட ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி கடந்த 15-11-2011 அன்று புகார் அளித்துள்ளனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த புகார் குறித்து தினகரன் தமிழ் முரசு போன்ற பத்தரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து கடந்த 24-11-2011 தேதி கலக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.



சனி, டிசம்பர் 10, 2011

துபையில் நடைபெற்ற திருவாருர் மாவட்ட தௌஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

கடந்த 12.02.2010 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் முதல் இஷா வரை துபைவாழ் திருவாருர் மாவட்ட தௌஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம் ஜே.டி. மர்கஸில் அதன் தலைவர் சகோ. மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் ஜே.டி. துனைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபீக் முன்னிலை வகித்தார். மேலும், இக்கூட்டத்தில் பின்வரும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருங்கினைப்பாளர்: அமீர் பாட்சா 050 – 5282934 பொதக்குடி
தலைவர் : முஹம்மது குரைஷி 050 – 5275642 முத்துப்பேட்டை
து.தலைவர் : கலிமுல்லாஹ் தண்ணீர்குண்ணம்
செயலாளர் : ஜஹபர் அலி 050 – 7656231 முத்துப்பேட்டை
து.செயலாளர் :ராஷிக்அலி 050- 6959662 நாச்சிக்குளம்
பொருளாளர் : அப்துல் கஃபூர் 050 – 7643776 பொதக்குடி
மேலும், இக்கூட்டத்தில் திருவாருர் மாவட்டத்திற்கு மேலும் இரண்டு புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே வாங்கிய ஆம்புலன்ஸூக்கான கடன் தொகையை அடைப்பதற்காக ரூபாய் 30,000 இக்கூட்டத்திலேயே வசூலானது குறிப்பிடத்தக்கது.
இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு மாதம் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமைகளில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஜே.டி.மர்கஸில் மாதாந்திரக்கூட்டம் நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டது