இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

26/1/2013 மரக்கடை , அத்திக்கடை மற்றும் RED CROSS இணைந்து இரத்த தானா முஹாம் அத்திக்கடை ஊராட்சி நடுநிலை துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.


மனித நேயத்தை வார்தைகளால் மற்றும் அல்ல செய்து காட்டுவோம் என்று பரைசாட்டும் வகையில் 26/1/2013 அன்று மரக்கடை , அத்திக்கடை மற்றும் RED CROSS இணைந்து இரத்த தானா முஹாம் அத்திக்கடை ஊராட்சி நடுநிலை துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இன் நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.சேக் அலவுத்தின் தலைமை தாங்கினார். மன்னை இமாம் அப்துல் ஹமிது அவர்கள் இஸ்லாம் இரத்த தானம் குறித்து எவ்வாறு வழியுருத்துகிறது என்று உரை நிகழ்த்தினர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 34 unit இரத்தம் தானம் செய்யப்பட்டது. இன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பெற்றது.

மதிய உணவு நமது பொதக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆயிஷாப் பள்ளியில் தயார் செய்யப்பெற்று அளுமினிய ஃபாயில் டப்பாக்களில் பாக்ஸ் பேக்கிங் செய்யப்பட்டது அத்திக்கடையில் வினியோகிக்கப்பட்டது.

இன் நிகழ்ச்சிகாக மரக்கடை, பொதக்குடி, மற்றும் அத்திக்கடை நிருவாகிகளும். உருப்பினர்களும் அயராது பணி செய்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் மரக்கடை , பொதக்குடி, அத்திக்கடை ஆகிய கிளைகள் ஒருங்கிணைந்து தாவா செய்வது என முடிவு செய்யப்பெற்றது.










25/1/2013 மொவ்லிது தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? மார்க்க செரற்பொழிவு நடைப்பெற்றது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25/01/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் மொவ்லிது தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? என்ற தலைப்பில் இமாம் ஜமான் அவர்கள் உரை நிகழ்த்தி தாவா செய்தார்.  

26/01/2013 மரக்கடை கிளை சார்பாக ரூபாய் 10.600 கல்வி உதவி வழங்கப்பெற்றது


நமது மரக்கடை கிளை சார்பாக சபிர் அஹமது என்ற மாணவனை EEE மன்னார்குடி ARJ கல்லூரியில் படிக்க வைத்து வருகிறோம். தற்போது இவருக்கு கல்லூரி இரண்டவது செமஸ்டர் கட்டனைத்திற்கான மடல் கல்லூரி நிருவாகத்தின் மூலம் கிடைக்கபெற்றதை அடுத்து . நமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வைத்து இஷா தொழுகைக்கு பிறகு மரக்கடை தலைவர் பாதுஷா மெய்தீன், அத்திக்கடை துணைச் செயலாளர் ஃபைசல் மற்றும் கிளை உறுப்பினர்கள் முன்னிலையில் அதற்கான கட்டனத்தொகை வங்கி காசோலையாக  சபிர் அஹமதுவிடம் வழங்கப்பெற்றது. இதற்காக உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் சதக்கத்துல் ஜாரியா என்னும் நிரந்தர தர்மத்திற்கான நன்மையை வழங்கி அருள் புரிவானாக .  

25/1/2013 இரத்ததான முகாமை ஆலோசனைக்கூட்டம் : மரக்கடை


திருவாரூர் மாவட்டம், மரக்கடை  கிளையில் 25/01/13 அன்று  இரவு இஷா தொளுகைக்கு  பிறகு மரக்கடை மற்றும் அத்திக்கடை கிளையின் ஆலோசனைக்கூட்டம்  மரக்கடை கிளை தலைவர் பாதுஷா மெய்தீன் தலைமையில் நடைபெற்றது

இதில் 26/01/2013 அன்று மரக்கடை மற்றும் அத்திக்கடை கிளைகல் இணைந்து நடத்தும்  இரத்ததான முகாமை எப்படு சிறப்பாக நடத்துவது எனவும் உணவு எற்பாடு தொடர்பாகவும் , ஆலோசிக்கப்பட்டது.
 

22/1/2013 முதல் G PLUS TV இல் 26/01/2013 அன்று அத்திக்கடையில் நடைப்பெறும் இரத்த தான முகாம் குறித்து SCROLLING விளம்பரம் செய்யப்படுகிறது.


திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருகினைந்த நேச கிளைகளின் சார்பாக வருகின்ற 26/01/2013 அன்று அத்திக்கடை & மரக்கடை  கிளை இனைந்து நடத்தும் இரத்த தான முகாம் குறித்து SCROLLING விளம்பரம் செய்யப்பட்டு மக்களை அழைக்கும் பணியில் மரக்கடை லெட்சுமாங்குடி மற்றும் அத்திக்கடை  கிளை முழுமையாக ஈடுப்பட்டு வருகிறது.

24/01/2013 மரக்கடை கிளை சார்பில் விஸ்வரூபம் படம் ஓடாது என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.


திருவாரூர் மாவட்டம், மரக்கடை  கிளை சார்பில் கடந்த 24-1-2013 அன்று விஸ்வரூபம் படம் ஓடாது என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.

23/01/2013 இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டது


திருவாரூர் மாவட்டம், மரக்கடை  கிளையின் சார்பாக கடந்த 23-1-2013 அன்று இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டது

22/01/2013 மரக்கடை கிளை சார்பாக நேச கிளைகளான அத்திக்கடை , பொதக்குடி , ஆகிய கிளைகளுக்கு விஸ்வருபம் திரைப்படத்திற்க்கான எதிர்ப்பு சுவர் ஒட்டிகள் தயர் செய்து கொடுக்கப்பட்டது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி சார்பாக 22/01/2013 அன்று மாநில தலைமையினால் கொடுக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய விஸ்வருபம் திரைப்படத்திற்க்கான எதிர்ப்பு சுவர் ஒட்டிகள்  மரக்கடை கிளை தயர் செய்து நேச கிளைகளான அத்திக்கடை  , பொதக்குடி , ஆகிய கிளைகளுக்கு கொடுக்கப்பட்டது.

21/1/2013 ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தக வனியோகம்


திருவாரூர் மாவட்டம்,  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பில் 21/01/2013 அன்றுமாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம்  மாற்று மத சகோதரர் விஜயபாரதி (மனித உரிமை கழக நிடாமங்கலத் ஒன்றிய தலைவர்) அவர்களுக்கு  கொடுத்து தாவா செய்யப்பட்டது.

20/01/2013 அன்று மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைப்பெற்று சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பெற்றது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக   கடந்த 20.01.2013 அன்று காலை10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைப்பெற்றது.. இம் முகாமில் மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் பாதுஷா மெய்தீன் பேச்சு பயிற்சி கொடுத்து பிறகு உரை நிகழ்த்தினார். இன் நிகழ்ச்சியில் 28 நபர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்



20/01/2013 ஒன்ரே குலம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக 20/01/2013 அன்று ஒன்ரே குலம் ஒருவனே தேவன் என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். கொரடாச்சேரி. ரோட்டிலும் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.

19/01/2013 இஸ்லாமிய பெண்ணே நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 19/01/2013 அன்று இஸ்லாமிய பெண்ணே  என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். கூத்தாநல்லூர் A.R. ரோட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.

18/1/2013 கடியச்சேரி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக சுவர் ஒட்டிகள் மரக்கடை


திருவாரூர்  மாவட்டம்  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக    (இன்ஷா அல்லாஹ்) வருகிற  20.1.2013 அன்று திருவாரூர்  மாவட்டம்   கடியச்சேரி கிளையின் சார்பில்  நடைப்பெறவிறுக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக 18/1/2013 அன்று சுவர் ஒட்டிகள் மரக்கடை பகுதிகளில் ஒட்டப்பட்டது தாவா செய்யப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

17/01/2013 - சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும். அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் நோட்டிஸ் வினியோகிக்கபட்டது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 17/01/2013 அன்று  ”சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும். அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும்என்ற தலைப்பில் நோட்டிஸ் 100 வினியோகிக்கபட்டது..

16/01/2013 முன்னோர்களை பின் பற்றுதல் தாவா நோட்டிஸ் வினியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 16/01/2013 அன்று முன்னோர்களை பின் பற்றுதல் என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். வீடு வீடாகவும் விநியோகம் செய்யப்பட்டது.

15/01/2013 மரக்கடை கிளையிள் பெண்கள் பயான் நடைபெற்றது. 3 பரிசுகள் வழங்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம், மரக்கடை கிளை  சார்பாக 15/01/2013 அன்று சகோதரர் பாதுஷா மெய்தீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  திருவிடச்சேரி ரமளான் ஆலிமா உரை நிகழ்த்தினர். இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பெற்றது.  மேலும் நிகழ்த்திய உரையிலிருந்து 3 கேள்விகள் கேற்கப்பெற்று 3 பரிசுகள் வழங்கப்பட்டது..இதில் 11 பெண்களும் 15 சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

13/01/2013 மரக்கடை கிளையின் சார்பாக தண்ணிர்குன்னம் தாயிகளின் பயிற்சி முகாமிற்கு ஒரு ஆட்டோவில் 6 மாணவர்கள் சென்று வந்தனர்


திருவாரூர்  மாவட்டம்  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக    கடந்த  13.1.2013 அன்று தண்ணிர்குன்னத்தில் நடைப்பெற்ற தாயிகளின் பயிற்சி முகாமிற்கு ஒரு ஆட்டோவில் 8 மாணவர்கள் சென்று வந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதால் மாணவர்கள் தங்களது விடுமுறையை  பயனுள்ளதாக செலவிடும் வாயிப்பை நமது ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

6.1.2013 மரக்கடையில் மாணவர்கள் மற்றும் கிளை நிருவாகிகளுக்கு நிருவாக ஒழுங்கு குறித்து நல்ஒழுக்க தர்பியா முகாம் நடைப்பெற்றது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக   கடந்த 06.01.2013 அன்று காலை10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள், மற்றும் கிளை நிருவாகிகளுக்கு நல்ஒழுக்க தர்பியா  முகாம் நடைப்பெற்றது. இத் தர்பியாவை கிளை தலைவர் பாதுஷா மெய்தீன் அவர்கள் துவங்கி வைத்தார். இம் முகாமில் மாணவர்களுக்கு தொழுகை குறித்தும் கிளை நிருவாகிகளுக்கு நிருவாக ஒழுங்கு  குறித்தும் மாவட்ட தாயி அப்துல் ஹமித் மஹ்ளரி அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் 34 நபர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்


5/1/2013 மரக்கடை கிளை சார்பாக இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 05/01/2013 அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தஃவா நோட்டிஸ் 100 மரக்கடை லெட்சுமாங்குடி கடை வீதிகளிலும் மற்றும் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள மாற்று மத சகோதரர்களின் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.

இன்று மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 04/01/2013 அன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளி, டிசம்பர் 14, 2012

09/12/2012 மரக்கடை கிளை சார்பாக சீடி கொடுத்து நமது ஜமாஅத் கொள்கையை கோட்பாடுகளை எடுத்துக் கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக கடந்த  09/12/2012 அன்றுசகோதரர் பி.ஜெ உரையாற்றிய அன்பான அழைப்பு”  என்ற தலைப்பில் சீடி கட்டிமேடு சார்ந்த சகோதரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு நமது ஜமாஅத் கொள்கையையும் கோட்பாடுகளையும்  எடுத்துக் கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.
 
 

சனி, ஜூன் 30, 2012

29/06/2012 மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.



29/06/2012 ஒன்ரே குளம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29-06-2012  அன்று ஒன்ரே குளம் ஒருவனே தேவன் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.