கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை. இதை கண்டித்து வருகின்ற (18-6-2012) காலை 11 மணியளவில் திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை திருவாரூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இதை விளக்கும் விதமாக நமது மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு 14/06/12 அன்று மதியம் 2.10 மணியளவில் பாண்டுக்குடி சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் இமாம் ஹக்கீம் அவர்களிடம் ஜும்ஆவில் அறிப்பு செய்யும்மாறு வழியுருத்தப்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப் பட்டது.
